நாட்டின் பெயரை மாற்றக்கோரி வழக்கு-உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

நாட்டின் பெயரை மாற்றக்கோரி வழக்கு-உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

நாட்டின் பெயரை  பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த நமா ( Namah) என்பவர், இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர், நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில வார்த்தை எனவும், இது காலனியாதிக்கத்தை நினைவுபடுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.

ஆதலால் காலனியாதிக்க நினைவிலிருந்து மக்களை வெளிவருவதை உறுதி செய்ய அந்த பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்ற வேண்டும், இதற்காக  அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வர  மத்திய அரசுக்கு உத்தரவிட  கோரியுள்ளார். இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வரும் ஜூன் மாதம் 2ம் தேதி விசாரணை நடத்த வழக்கை பட்டியலிட்டுள்ளது.